Monday, June 3, 2013

வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்

வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் நான் படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் இதனை பதிவு செய்தேன் . படித்து முடிந்ததும் இன்ட்லி யிலோ அல்லது தமிழ் 10 இல்லோ வாக்களிக்க மறக்காதீர்கள் . ஏனெனில் மற்றவர்களுக்கும் உதவும் என்பதால் . 1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்படுத்து. சிறப்பான வழிகளை தேர்வு செய். வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத்தை ஒதுக்கு.. தினமும் எப்படி செய்வதென எழுது.. தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு.. தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய், வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்.. தினமும் வெற்றி பெற்றவர்களை பார், படி.. மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப் பயிற்சியில் ஈடுபடு. . 2. உனக்குள்ளேயே இன்னொரு மனிதனாக உருவெடுத்து தூண் டுதலை வழங்கி வெற்றி பெறு.. 3. வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது தன்னம்பிக்கையே. 4. கடந்த கால வெற்றிகளையும் தோல்விகளையும் ஆராய்ந்து அதில் சிறந்ததை தெரிவு செய்.. 5. உறங்கப் போகுமுன் உள்ளம் உறுதியாகும்படி மனதில் பேசிப்பழகு... 6. உறுதியுள்ள மனிதரோடு அடிக்கடி பேசிப்பழகு.. 7. பகை எண்ணங்களை விட்டொழிந்து தைரியமாக செயற்படு.. 8. தோல்வியடைந்தாலும் முழுமையான ஆற்றலை இணைத்து செயற்படு.. 9. சிறந்த வழியை கண்டெடுத்து உடனடியாக செயற்படு.. 10. ஒவ்வொரு நாளையும் நிமிடங்களையும், தன் வசமாக்கும் சாகசக்காரராக மாறி ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்து செயற்படுபவனே வெற்றியாளன். 11. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும். 12. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை.. 13. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும் அஞ்சாமல் முன்னேறு... 14. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே... 15. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்... 16. எதையும் பின் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென எண்ணிச் செயற்படு... 17. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான நிர்வாகத்திறன் வேண்டும். 18. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும் வெற்றி கிடைக்கும். 19. வெவ்வேறு திட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு ஒரே இலக்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் வரும் சிக்கல்களை ஆராய வேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க முயல வேண்டும். 20. மனதை ஒரு நிலைப்படுத்த இப்போதே பழகுங்கள் வெற்றி தானாகத் தேடி வரும். 21. ஒவ்வொரு நாளும் பல தடவை வெற்றி பெறுவேன் என்ற சிந்தனையை பல தடவைகள் சொல்ல வேண்டும். 22. பிறர் நம்மை என்னவாக எண்ண வேண்டுமென நினைக்கிறோமோ அதை நாம் முதலில் எண்ண வேண்டும். 23. வெற்றி என்பது தானாக வராது மற்றவருக்கு உதவுவதாலும் வரும். 24. வெற்றி என்பது கொடுப்பது, பின் அடைவது இது விளையாட்டல்ல நிஜம். 25. வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான். 26. வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறாயா முதலில் பாராட்டக் கற்றுக்கொள். 27. பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடைய மாட்டான் அவனை மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர். 28. எண்ணங்களோடு உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். உணர்வுகளுக்கான நேரம் வரும், நேரம் போகும். எதிர்மறை எண்ணங்களோடு உங்களை இணைத்தால் அதற்கு அடிமையாவது நிச்சயம். 29. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம் சுற்றியிருப்பதை உணர்வீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழமான விசயம் ஒன்றைப் புரிய வைக்கிறது. 30. ஒருவர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் 35 வீதமான அறிவு போதமானது. 65 வீதம் மற்றவர்களோடு எப்படி பழக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். 31. நீங்கள் செய்த தவறு என்னவென்று .. என்றபடி மற்றவருடன் பேச ஆரம்பிக்க வேண்டாம். புகழ்ச்சியுடன் இடையிலேயே விமர்சனங்களை வையுங்கள். 32. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள் நண்பர்களே சிந்தியுங்கள் செயற்படுங்கள் வெற்றிபெறுங்கள்

No comments:

Post a Comment