Monday, June 3, 2013

வைரமுத்து-தெரிந்தவை

பெயர்:கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த இடம்:வடுகப்பட்டி கிராமம்,தேனீ மாவட்டம் தமிழ்நாடு,இந்தியா. பிறந்த தேதி:ஜூலை 13 ,1953 . தகப்பனார்:ராமஸ்வாமி தேவர். தாயார்:திருமதி அங்கம்மாள் மனைவி:பொன்மணி மகன்:கார்க்கி ,கபிலன் எழுத ஆரம்பித்தது:7'வது வயதில் * 12 வயதில் பாடல்கள் எழுத முடிந்தது * 14 வயதில் யாப்பு வடிவிலான வெண்பா கவிதை எழுத முடிந்தது. * பாடசாலை இறுதி ஆண்டு பரீட்சையில் மதுரை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றார். * உயர் கல்வியை சென்னை பச்சையப்பா கல்லூரியில் மேற்கொண்டார். * பத்தொன்பதாவது வயதில் முதல் கவிதை தொகுப்பான "வைகரை மேகங்கள் "வெளியிட்டார். * உயர் கல்வி: M.A. தமிழ் இலக்கியம்(தங்கப்பதக்கம்) * திரைப்பட அறிமுகம்:பாரதிராஜாவின் "நிழல்கள்"திரைப்படத்தில் "பொன்மாலைப்பொழுது"என்ற பாடல். * முதல் வசனமெழுதிய படம்-நட்பு. பெற்ற விருதுகளில் சில : 1. தமிழ் நாடு அரசின் மாநில விருது-1981 2. தேசிய விருது-1986 (முதல் மரியாதை ) 3. M.G ராமச்சந்திரன் விருது-1989 4. கலைமாமணி விருது-1990 5. தேசிய விருது-1993 (ரோஜா) 6. தேசிய விருது-1995 (கருத்தம்மா) 7. தேசிய விருது-1995 (பவித்திரா) 8. தேசிய விருது-2000 (சங்கமம்) 9. தேசிய விருது-2003 (கன்னத்தில் முத்தமிட்டால்) 10. பத்மஸ்ரீ விருது -2003. 11. சாகித்திய அக்கடமி விருது-2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்) வைரமுத்துவின் முதலாவது திரைப்பட பாடலாகிய பொன் மாலை பொழுது பாடல் உங்களுக்காக.முதல் பாடலே மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடலாகும்.அன்று தொடங்கிய வைரமுத்துவின் பயணம் இன்னும் ஓயாமல் இந்திரன் வரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது :

No comments:

Post a Comment