Friday, May 27, 2016

இணையும் கரங்கள்

இணையும் கரங்கள்

இனி ஒரு விதி செய்வோம்..


சேவை மனப்பான்மை உள்ள, தன்னார்வம் மிக்க தோழர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு.

மனிதவளத்தை ஒன்றுதிரட்டி பேரிடரிலிருந்து நம்மை நாமே காப்போம்..

தோழர்களே இனிவரும் காலங்களில் விபத்து, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் ஏற்படின் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று நம்மால் முடிந்த மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும், சுகாதாரப் பணிகளையும் செய்ய தன்னார்வம் உள்ளவர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஒரு குழுவினை உருவாக்க உள்ளோம்..


இதில் தன்னார்வம் உள்ள தோழர்கள் தங்களின்

மாவட்டம்,
பெயர்,
பணி& பதவி,
கல்லூரி மாணவர் எனில் கல்லூரியின் பெயர்,
வீட்டு முகவரி ,
அலுவலக முகவரி,
தொலைபேசி எண்,
மின்னஞ்சல் முகவரி
போன்ற முழு விபரங்களையும் தெளிவாக குறிப்பிடவும்.

மேலே உள்ளவற்றில் நீல நிறத்தில் உள்ளவற்றிற்கு கட்டாயம் நிரப்புங்கள்...

இந்தக் குழுவில் இணைய மற்றும் விவரங்களை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்...

பதியப்பட்ட  விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்...

நான்  தஞ்சை மாவட்டத்தின் பேரிடர் மீட்புக் குழுவில் உள்ளேன்..

இந்தக் குழுவில் இணையும் தன்னார்வலர்களுக்கு அவர்களின் மாவட்டத்தில் உள்ள இந்தியன் ரெட் கிராஸ் மூலம் அந்தந்த மாவட்டத்திலேயே முதல் உதவி பயிற்சிகள், பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் வழங்கி அவர்களைக் கொண்டு அவர்களின் பகுதியில் பேரிடர் மீட்புக் குழுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்..

இந்தப் பயிற்சியை விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆசிரியராக உள்ளவர்கள் பயிற்சிக்கு செல்ல Red cross society முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து அனுமதியும் பெற்றுத்தந்திடுவார்கள்.

இந்தக் குழுவில் இணைபவர்களைக் கொண்டு WhatsApp & facebook-ல் ஒரு குழு உருவாக்கப்படும்.

இந்தக் குழு ஆபத்து காலங்களிலும், உதவி தேவைப்படும் பொழுதும் மட்டுமே உயிர் பெரும். இந்தக் குழுவினை பொழுது போக்கிற்கு பயன்படுத்த அனுமதி இல்லை..

ஆபத்தின் போது அடிக்கும் அலாரமாக மட்டுமே இந்தக் குழுக்கள் இயங்கும்.
தன்னார்வலர்கள் மீட்புப் பணியிலோ, நிவாரணப் பணியிலோ நேரடியாக ஈடுபட அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந்தியன் ரெட் கிராஸின் மூலம் பயிற்சி பெற்ற பேரிடர் மீட்புக் குழுவினருக்கு என்று தனி அடையாள அட்டை வழங்கப்படும். எனவே அவர்கள் சேவை செய்ய உலக நாடுகள் அனைத்திலும் தனி அங்கீகாரம் உண்டு..

Disaster Response Team Member சேவை செய்ய தடை ஏதும் இல்லை..

முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை உள்ள, தன்னார்வம் மிக்க தோழர்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாகவே கருதுகிறோம்..

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..


-இவண்
தேவராஜன்,
Cell- 9994101709
பேரிடர் மீட்புக் குழு உறுப்பினர்.
தஞ்சாவூர் ரெட் கிராஸ்

100 யூனிட் மின்சாரம் இலவசம்: கணக்கீடு எவ்விதம்? மின்சார வாரியம் அறிவிப்பு

100 யூனிட் மின்சாரம் இலவசம்: கணக்கீடு எவ்விதம்? மின்சார வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சார இலவசம் என்ற அறிவிப்பையடுத்து, மின்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

 இதனையடுத்து மே 23-ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக மீண்டும் பதவியேற்றதும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதன்படி மே 23-ஆம் தேதிக்குப் பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். இந்நிலையில் மின்சார பயன்பாட்டுக்கான கட்டணத்தை எவ்வாறு கணக்கிடுவது என்று பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து மின்சாரத்தை கணக்கிடுவது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

கணக்கீட்டு முறை: மின்சார வாரியம் 0 - 200, 201 - 500, 501 - 1100 வரை என்று மூன்று பிரிவுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கிறது. புதிய சலுகையின்படி இரண்டு மாதங்களில் 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

0 - 200 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 120 யூனிட் பயன்படுத்தினால், அவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம். மீதம் உள்ள 20 யூனிட்டுக்கு ரூ 1.50 வீதம் ரூ. 30, நிரந்தரக் கட்டணம் ரூ. 20 சேர்த்து ரூ. 50 செலுத்த வேண்டும். இதே போன்று 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்டை கழித்தது போக மீதி உள்ள யூனிட்டுக்கு ரூ. 1.50 கட்டணத்தில், நிரந்தரக் கட்டணம் ரூ 20 சேர்த்து வசூலிக்கப்படும்.201 - 500 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். அடுத்த 101 - 200 யூனிட்டுக்கு ஒரு யூனிட் ரூ. 2 என்ற அடிப்படையில் ரூ. 200, 201 - 500 யூனிட் வரை, ஒரு யூனிட்ரூ.3 என்ற அடிப்படையில் ரூ. 900, அதனுடன் நிரந்தக் கட்டணம் ரூ. 30 சேர்த்து, மொத்தம் ரூ. 1130 வசூலிக்கப்படும்.

501 - 1,100 யூனிட்: ஒரு மின்நுகர்வோர் 1,100 யூனிட் வரை பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். 101 - 200 யூனிட் வரை, ஒரு யூனிட் ரூ. 3.50 என்ற அடிப்படையில் ரூ. 350, 201 - 500 யூனிட் வரை, ஒரு யூனிட்ரூ.4.60 என்ற அடிப்படையில் ரூ. 1,380, 501 - 1,100 வரை ஒரு யூனிட் ரூ. 6.60 என்ற அடிப்படையில் ரூ. 3,960, நிரந்தரக் கட்டணம் சேர்த்து ரூ. 50 சேர்த்து, மொத்தம் ரூ. 5,740 வசூலிக்கப்படும்.100 யூனிட் மின்சார சலுகை அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோர்களுக்கும் கிடைக்கும். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு சப்-மீட்டர் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கணக்கிடப்பட்ட மின்கட்டண விவரம்

யூனிட் -மின்கட்டணம்(ரூபாயில்)

120 - 50
160 - 110
200 - 170
250 - 380
300 - 530
450 - 980
500 - 1,130
650 - 2,770
800 - 3,760
950 - 4,750
1,100 - 5,740